இராசிகள் 12. அவற்றின்
பெயர்கள் ஒரே வெண்பாவில் அடைமொழிச்சொல் இல்லாமல் வரும்படி அமைத்துக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
பாடல்
பகருங்கான் மேடமிட பம்மிதுனங் கற்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் – சிகந்த
நுசுமகரங் கும்பமீனம் பன்னி ரண்டும்
வரையறு மிராசி வளம் (39 )
பகருங்கால் | மேடம் | இடபம் | மிதுனம் | கற்கடகம் | சிங்கம் | கன்னி | துலாம் | விர்ச்சிகம் |
தநுசு | மகரம் | கும்பம் | மீனம் | பன்னிரண்டும் வரையறும் இராசி வளம்
![]() |
| 12 Zodiac |
![]() |
| 12 இராசிகள் |


No comments:
Post a Comment