Pages

Sunday, 13 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 6

சேரன் | மாந்தை நன்னாடன்
பாடல் 6

புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு? – 6

மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக் கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? கண்டபடி பேசுகிறார்களே!
புன்னாகம், நன்னாகம், தென்னை ஆகியன மலரும் ஊர் மாந்தை நகரம்.
தென்னம்பாளை
 


No comments:

Post a Comment