கரண்டகம், பெண்குறி
ஆகிய இரண்டும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து காளமேகப்புலவர் நிறுவியுள்ளார்.
பாடல்
இட்டிட்டு வாங்குதலால் இன்பவெள்ளை தோன்றுதலால்
மட்டிட்டு மூடி மறைக்கையால் - முட்டத்
தெருண்டோர்கள் போற்றும் திருமலைரா யன்சீர்க்
கரண்டகமும் பெண்குறியாம் காண். (23)
முற்றிலும் தெளிவானவர்கள் போற்றும் திருமலைராயன்
சுண்ணாம்புக் கரண்டகம்
இட்டு இட்டு வாங்குதலால் இன்ப வெள்ளை தோன்றுதலால்
மட்டு இட்டு மூடி மறைக்கையால்
சுண்ணாம்புக் கரண்டகத்தில் சுண்ணாம்பு தோண்டும்
கம்பியை உள்ளே விட்டுச் சுண்ணாம்பை வாங்குவர்.
அப்போது இனிய வெள்ளைநிறச் சுண்ணாம்பு அதில்
வரும்.
சுண்ணாம்பு மட்டை (குழம்பை) எடுத்துக்கொண்ட
பின்னர் சுண்ணாம்புக் கரண்டகத்தை மூடி போட்டு மூடிவிடுவர்.
பெண்குறி
இட்டு இட்டு வாங்குதலால் இன்பவெள்ளை தோன்றுதலால்
மட்டு இட்டு மூடி மறைக்கையால்
பெண்குறிக்குள் இட்டு இட்டு வாங்குவர்.
இன்பவெள்ளை அதற்குள் தோன்றும்.
இன்ப-மட்டு இட்ட பின் துணி போட்டு மறைப்பர்.
![]() |
| இது வெற்றிலைப் பாக்கு அடைப்பான் இதற்குள் சுண்ணாம்பு அடைப்பான், காது தோண்டும் கருவியாகவும் பயன்படுத்தப்படும் சுண்ணாம்புக் கரண்டி, வெற்றிலை பாக்கு முதலானவற்றை வைத்திருப்பர். |

No comments:
Post a Comment