குடத்திலே கங்கை அடங்கும் என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
பாடல்
விணணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் –பெண்ணை
இடத்திலே வைத்த
விறைவர் சடாம-
முடத்திலே கங்கை யடங்கும் (28)
இறைவன் சடாமகுடத்திலே (சடையிலே) கங்கை அடங்ககும்.
விண்ணுலகில்
பாய்ந்த கங்கையாற்றை மண்ணுலகம் வருமாறு பகீரதன் தவம் செய்து வரமாகப் பெற்றான். மண்ணுலகே
அழியுமாறு அந்த ஆறு சினம் கொண்டு இறங்கியது. வரமளித்த சிவன் கங்கை அடங்குமாறு தலைவிரி
கோலத்துடன் நின்றான். அவன் சடைமுடிக்குள்ளே கங்கையாறு முழுவதும் அடங்கிவிட்டது. அடங்கிய
கங்கையாற்றுச் சிதறல் துளிகளே இப்போது பாயும் கங்கையாறு என்பது ஒரு கதை.

No comments:
Post a Comment