டுடுடுடுடு என வரும்படிக் காளமேகப் புலவர்
பாடிய வெண்பா.
பாடல்
ஓ கா மா
வீ தோ வுரைப்பன் டு
டு டு டு டு
நாகார் குடந்தை நகர்க்கதிபர் - வாகாய்
எடுப்பர் நடமிடுட் டேறுவ ரன்பர்க்குக்
கொடுப்ப ரணிவர் குழைக்கு
(27)
ஓடு, காடு, மாடு, வீடு, தோடு என்று உரைப்பன்
நாகார் குடந்தை நகர்க்கு
அதிபர் வாகாய் எடுப்பர்
ஓடு என்று
உரைப்பன்
இளமை
மிக்க கும்பகோணம் நகரின் தலைவனாகிய சிவன் எடுப்பது ஓடு.
நடமிடுவது காடு என்று உரைப்பன்
சிவன்
நடனம் ஆடுவது சுடுகாடு.
ஏறுவர் மாடு என்று
உரைப்பன்
சிவன்
ஏறிச் செல்வது காளைமாடு.
அன்பர்க்குக் கொடுப்பர் வீடு என்று உரைப்பன்
தன்மேல்
அன்பு கொண்டவர்களுக்குச் சிவன் வீடு கொடுப்பார்.
அணிவர் குழைக்குப் பெயர் தோடு என்று உரைப்பன்
சிவன்
தன் காதில் அணிவது தோடு
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.- சம்பந்தர் தேவாரம்1.1.1

No comments:
Post a Comment