ஒன்று முதல் பதினெட்டு வரையில் உள்ள எண்களை
வெண்டளை பிழையாத வெண்பாவாக அமையும்படி காளமேகப்புலவர் பாடிக் காட்டியுள்ளார்.
இது ஒரு எண்-ஏணி
ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு வேழெட்டு
ஒன்பது பத்துப் பதினொன்று
– பன்னி
ரண்டுபதின் மூன்றுபதி னான்குபதி னைந்துபதி
னாறுபதினேழ்பதி னெட்டு (26)
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்று – பன்னிரண்டு
பதின்மூன்று பதினான்கு பதினைந்து பதினாறு பதினேழ் பதினெட்டு (26)

No comments:
Post a Comment