நாராயணனைப் பெண்ணாக்கி வியந்து
வெண்பா ஒன்றில் காளமேகப்புலவர் தன் தொழித்திறம் காட்டிப் பாடியது.
சிவபெருமானின்
இடப்பக்கம் பெண்ணாக இருக்கிறான் என்பது ஒரு கதை. இதனைத் தழுவியது இந்தப் பாடல்
பாடல்
இந்தோ திலகநுதல் ராமராம மாவனசக்
கொந்தோ களபமுலை கோவிந்தா – சந்ததமும்
வேலோ விணைவிழிகள் வேங்கடவா நல்லவயி
ராலோகா ணாராய ணா. (25)
இந்தோ திலகநுதல் ராம ராம மாவனசக் கொந்தோ களப முலை கோவிந்தா சந்ததமும் வேலோ இணைவிழிகள் வேங்கடவா நல்ல அயிர் ஆலோ காண் நாராயணா. (25)
நாராயணா! உன் நெற்றிப்பொட்டு நிலாவோ
ராமராம (இப்படிச் சொல்லி வாயில் அடித்துகொள்வர்)
உன் முலை மாங்கொத்து செருகிய கலசமோ
கோவிந்தா
எப்போதும் உன் இரண்டு விழிகள் வேலோ
வேங்கடவா
நல்ல ஈட்டியோ (அயிர் - அயில் = ஈட்டி)
காண் – இடைநிலை அசை

No comments:
Post a Comment