கின்னரி வாசிக்கும் கிளி
– என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
பாடல்
ஆடல்புரிந் தானென்று மந்நாளி லேமூவர்
பாடலுகந் தானென்றும் பான்மையினால் –கூடலிலே
நன்னரிவா சிக்குநடை பயிற்றினா னென்றும்
கின்னரிவா சிக்கும் கிளி. (30)
கின்னரி = வீணை = யாழ்
கிளி சைவக் குரவர் நால்வர் கதையைச் சொல்லித்
தன் வாயிசையில் யாழொலியை எழுப்பிக்கொண்டிருந்தது.
- சிவன் ஆடல் புரிந்தான்.
- அப்பர், சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகிய மூவர் பாடல்களை விரும்பிக் கேட்டான்.
- பாண்டியனின் கூடல் நகரில் நரியைப் பரியாக்கிக்கொண்டு நடந்து வந்தான். பின்னர் பரியை நரியாக மாற்றி அவற்றின் ஊளையிடும் குரலை வாசிக்கும்படிச் செய்தான்.

No comments:
Post a Comment