திருமாலைப் பொன்னாவரை
இலை, காய், பூ (பொன், ஆ, வரை, இலை, காய், பூ) – என்று காளமேகப் புலவர் பாடிய
வெண்பா.
பாடல்
உடுத்ததுவு மேய்த்ததுவு மும்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் – படுத்ததுவும்
அந்நா ளெறிந்துவு மன்பி னிரந்த்துவும்
பொன்னா வரையிலைகாய் பூ .(31)
உடுத்ததுவும் |
மேய்த்ததுவும் |
உம்பர்கோன் தன்னால்
எடுத்ததுவும் |
பள்ளிக்கு இயையப் – படுத்ததுவும் |
அந்நா ளெறிந்துவும் | அன்பில் இரந்த்துவும் |
பொன் | ஆ | வரை | இலை | காய் | பூ .(31)
திருமால்
- உடுத்தது பொன்னாலான ஆடை
- மேய்த்தது ஆ (பசு)
- உம்பர்கோன் இந்திரன். அவன் பொழிந்த மழையைத் தடுக்கும் குடையாக எடுத்தது வரை (மலை)
- பள்ளிகொள்வதற்கு ஏந்தாகப் படுத்திருப்பது இலை (ஆலிலை)
- அந்த நாளில் எறிந்தது காய் (விளாங்காய்) கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன் – சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை.
- மாவலி மன்னன் மீதுள்ள அன்பினால் அவனிடம் இரந்தது
பூ (பூமியாகிய மூன்றடி மண்)

திருமால் கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தான்
No comments:
Post a Comment