திருமாலைப் பொன்னாவரை
இலை, காய், பூ (பொன், ஆ, வரை, இலை, காய், பூ) – என்று காளமேகப் புலவர் பாடிய
மற்றொரு வெண்பா.
பாடல்
தோய்த்தான்மேய்த்
தான்குடையாத் தூக்கினான் மேன்மேலாச்
சாய்ந்தா னெறிந்தான்பின் சாப்பிட்டான் – ஆய்ந்துசொலும்
மன்னா வரத்தில்வரு மால்சாமி நாதாகேள்
பொன்னா வரையிலை காய்பூ .(32)
தோய்த்தான் \ மேய்த்தான் \ குடையாத் தூக்கினான் \ மேன்மேலாச்
சாய்ந்தான் \ எறிந்தான் \ பின் சாப்பிட்டான் – ஆய்ந்துசொலும்
மன்னா வரத்தில் வரும் மால்சாமிநாதா கேள்
பொன் \ ஆ \ வரை \ இலை \ காய் \ பூ .(32)
திருமால்
- தோய்த்தது பொன்
- மேய்த்தது ஆ
- குடையாத் தூக்கியது வரை
- மேலேறிச் சாய்ந்திருப்பது இலை
- எறிந்தது காய்
- சாப்பிட்டது பூ
வரமிருந்து பெற்ற மால்சாமிநாதா! கேட்டுக்கொள்.
ஆராய்ந்து பார்த்து நீயே சொல்.
திருமால்
- பொன் என்னும் திருமகளைத் தன் நெஞ்சுக்குள்ளே தோய்த்துப் பதுக்கி வைத்துக்கொண்டான்.
- ஆனிரை மேய்த்தான்
- மலையைக் குடையாகப் பிடித்தான்
- ஆலிலை மேல் பள்ளிகொண்டுள்ளான்
- கன்றை எறிந்து விளாங்காயை உதிர்த்தான்
- பூமியை விழுங்கி வாய்க்குள்ளே காட்டினான்.

ஆலிலை மேல் கண்ணன்
No comments:
Post a Comment