செங்கழுநீர்க் கிழங்கு – என்று காளமேகப்
புலவர் பாடிய வெண்பா.
கழு, நீர், கிழங்கு ஆகிய சொற்களுக்கு விளக்கமாக
நிரல் நிறுத்திய செய்திகள் இதில் உள்ளன.
குளத்தில் கழுநீர்ப் பூவின் வேராகக் கிழங்கு
இருக்கும்.
இது செங்கழுநீர்க் கிழங்கு.
பாடல்
வாதமண ரேறியது மாயன் துயின்றதுவும்
ஆதிதடுத் தாட்கொண்ட வவ்வுருவம் –சீதரனார்
தான்கொண் டளந்ததுவும் தண்கச்சிக் காவலா
கேள்செங் கழுநீர்க் கிழங்கு .(33)
வாதமண ரேறியது செங்கழு
ஞானசம்பந்தரோடு வாதிட்டுத் தோற்ற அமணர் (சமணர்)
ஏறியது கழுமரம்.
மாயன் துயின்றது நீர்
திருமால் துயின்ற இடம் கடல்நீர்.
ஆதி தடுத் தாட்கொண்ட அவ் உருவம் செங்கழுநீர்
ஆதியாகிய சிவபெருமான் சுந்தரரைத் தடுத்து
ஆட்கொண்ட உருவம் கிழப் பருவம். செந்தண்மை பூண்டொழுகும் அந்தணனாகிய கிழங்குப்
பருவம்.
சீதரனார் தான்கொண்டு அளந்தது நீர்
திருமால் மாவலி மன்னனிடம் மண்ணை அளந்து வாங்கப்
பயன்படுத்தியது மன்னன் தாரை வார்த்துத் தந்த நீர்.

No comments:
Post a Comment