Pages

Saturday, 28 November 2015

காளமேகப்புலவர் நாநீநூநே KalamekapPulavar

நாநீநூநே – என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

அரையின் முடியி லணிமார்பி னெஞ்சில்
தெரிவை யிடத்தமர்ந்தான் சேவைபுரையறவே
மானார் விழியீர் வொற்றி நிற்கும்
ஆனாலா நாநீநூ நே .(34)

மான் போன்ற களங்கமற்ற விழிநோக்கம் கொண்ட பெண்களே!
கண்டுகொள்ளுங்கள்.
Ø  தெரிவையாகிய பெண்ணை இடப்பாகத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பவன் சிவபெருமான்.
Ø  அவன் நமக்கு அருள் பாலிக்கும் சேவை செய்கிறான்.
Ø  அவன் எப்படி இருக்கிறான்?
Ø  நா நீ நூ நே ஆகிய எழுத்துக்களோடு ம ல ர ஆகியவற்றின் ஒற்று-எழுத்து ஒன்றை இணைத்து விடை கண்டுகொள்ளுங்கள்.
சிவன் கங்கையைத் தலையில் வைத்திருக்கிறான்

அரையில் இருப்பது நார்
அரை என்னும் இடுப்பில் இருப்பது நாரால் செய்யப்பட்ட ஆடை
அரை என்னும் நிழலில் இருப்பது நாம்
அரை என்னும் நிழலில் இருப்பது நார் என்னும் அன்பு
(நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் – திருக்குறள் – அன்பு இன்மை தோன்றின்)
முடியில் இருப்பது நீர்
கங்கை நீர்
அழகிய மார்பில் இருப்பது நூல்
பூணூல்
நெஞ்சில் இருப்பது நேம்
நெஞ்சில் இருப்பது நேயம் என்னும் உறவுமுறை.
அவன் நாமாக, நாம் அவனாக இருக்கும் உறவுமுறை.  


No comments:

Post a Comment