ஈ உட்கார்ந்ததும் மலை குலுங்கியது – என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
![]() |
| வெண்ணெய் திருடாதே என்று கண்ணனை மத்தால் அடித்தல் |
பாடல்
வாரணங்க ளெட்டு மகமேருவுங் கடலும்
தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்
பண்வா யடைச்சி பருமத்தி னாலடித்த
புண்வாயி லீமொய்த்த போது . (35)
கண்ணன் வெண்ணெயைத்
திருடி உண்டபோது ஆய்ச்சியர் வெண்ணெய் உண்ட வாயில் மத்தால் அடித்தனர்.
பண் பாடி அடித்தனர்.
அதனால் கண்ணன் வாயில்
புண்.
அந்தப் புண்ணில் ஈ
மொய்த்தது.
கண்ணன் மண்ணை உண்டவன்.
மண்ணுலகை விழுங்கியவன்.
வெண்ணெய் உண்ட வாயைத்
திற என்று அவனை அடித்தபோது அவன் வாய்க்குள் மண்ணுலகம் தோன்றியது.
v அதில் இருந்த மலைகள் குலுங்கின.
v
புண்வாயில் ஈ
மொய்த்தபோது மலைகள் சலித்தன (குலுங்கின).
v
எட்டுத் திசைகளைக்
காக்கும் யானைகள் குலுங்கின.
v
மேருமலை குலுங்கிற்று.
v
கடல் குலுங்கிற்று.
v உலகம் குலுங்கிற்று.

No comments:
Post a Comment