சோகாமாஏவாதா என்னும்
ஓரெழுத்தொருமொழி சொல்லைச் சிவபெருமானோடு இணைத்து ஒரு வெண்பாவில்
பாடிக் காட்டிய காளமேகப் புலவர்
வெண்பா.
பாடல்
சோகாமா ஏவாதா சொல்லின்மனைக் கூட்டியுமை
பாகார்ந்த தில்லைப் பரமேசர் – வாகாய்த்
தரித்தா ரெரித்தார் தறித்தா ருதைத்தார்
உரித்தார் கணைபடைத்தா ரூர்க்கு . (47)
சோ கா மா ஏ ஆ தா சொல்லின் மனைக் கூட்டி உமை பாகார்ந்த தில்லைப் பரமேசர் வாகாய்த் தரித்தார், எரித்தார், தறித்தார், உதைத்தார், உரித்தார், கணைபடைத்தார் ஊர்க்கு .
சிவன்
- சோ தரித்தார் (சோ = அரண், முப்புரம், மூன்றுகோட்டைகளைத் துகளாக்கினார்)
- கா எரித்தார் (காட்டை எரித்தார்) கரிகாடு கோயில்
- மா தறித்தார் (மானைக் கையில் ஏந்தினார்)
- ஏ உதைத்தார் (காமனைக் காலால் உதைத்தார்)
- ஆ உரித்தார் (யானைத் தோலை உரித்தார்)
- தா கணை படைத்தார் (தாவும் நெற்றிக்கண் கணையைப் படைத்தார்)
அ

No comments:
Post a Comment