’மன்’ என்று எடுத்து ‘மலுக்கு’
முடித்து ஒரு வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப்
புலவர் வெண்பா.
பாடல்
மன்னுதிரு வண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குப்
பன்னுந் தலைச்சவரம் பண்ணுவதேன் – மின்னின்
இளைத்தவிடை மாதரிவன் குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டாம லுக்கு . (46)
மன்னு திருவண்ணாமலைச் சம்பந்தாண்டாற்குப் பன்னும் தலைச்சவரம் பண்ணுவது ஏன்?
மின்னின் இளைத்த இடை மாதர் இவன் குடுமி பற்றி வளைத்து இழுத்துக் குட்டாமலுக்கு.
நிலைபேறுடைய புகழ் கொண்டது
திருவண்ணாமலை.
சம்பந்தாண்டான் என்பவன் அவ்வூரில்
வாழ்ந்துவந்தான்.
அவனுக்குத் தலைச்சவரம் பண்ணினர்.
(மொட்டை அடித்தனர்)
எதற்காக இப்படிச் சவரம் செய்கிறார்கள்
என்று கேட்டுக்கொண்டு விடை பகர்கிறார் புலவர்.
இவனது மனைவியர் இனைக் குட்டும்போது இவன்
குடுமியைப் பிடித்து இழுத்துப் பிடிக்காமல் இருப்பதற்காக. – இது விடை.
![]() |
| தலைச்சவரம் பண்ணல் |

No comments:
Post a Comment