கீரை, காய், நீர்,
காற்று என்றெல்லாம் வாய்க்கு வந்த சொற்களால் பாடி முருகப் பெருமானைப் போற்றிய காளமேகப் புலவர் வெண்பா.
பாடல்
அப்பா குமரகோட் டக்கீரை செவிலிமேட்
டுப்பாகற் காய்பருத்திக் குழிநீர் – செப்புவா
சற்காற்றுக் கம்பத் தடியிற் றவங்கருமா
றிப்பாய்ச்சல் யார்க்கு மினிது . (43)
அப்பா | முருகப்பா
குமரகோட்டக்
கீரை | நீ காஞ்சிபுரம் குமரக்கோட்டத்துக்
கீரை | கீரை = பச்சைப்பிள்ளை
செவிலிமேட்டுப்
பாகற்காய் | உமை என்னும் செவிலித் தாயைத் தன் உடலின்
மேட்டுப் பாகத்தில் கொண்டிருப்பவன் சிவன்.
பருத்திக்குழி
நீர் செப்புவாசல் | பருத்திக்குழி என்பது காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள ஓர் ஊர். அந்த
ஊரில் குளம் ஒன்று உள்ளது.
காற்றுக் கம்பத்தடியில் தவம் | அந்தகாசுரன் என்னும் அரக்கனைச் சிவபெருமான் தன் சூலாயுதத்தில் குத்தித்
தூக்கிக்கொண்டு நடனம் ஆடினார். அந்தகாசுரன் தவம் செய்தான். வயிரவர் அவனை
அங்கிருந்த நீர் ’செப்புவாசல்’ குளத்தில் நீராடச் செய்து அவனைக் காப்பாற்றினார். காஞ்சிபுராணம் என்னும் நூலில் இந்தச் செய்தி உள்ளது.
கருமாறிப்
பாய்ச்சல் | சிவபெருமான் பிள்ளையாக நீ கரு மாறிப்
பாய்ந்தாய். | தசைப்பிண்டம் – ஆறுமுகம் – ஒருமுகம்
யார்க்கு மினிது | முருகப்பா! இப்படி நீ கரு மாறிப் பாய்ந்தது எல்லார்க்கும்
இனிதாக முடிந்தது.
![]() |
| வயிரவர் நாய் ஊர்தி நாயகன் (சிவன்) |

No comments:
Post a Comment