திருமால் 10 பிறவி
எடுத்தார். அந்த 10 பிறவிகளைப் பாதி வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.
பாடல்
மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலுன் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்
மாகோலா சிங்கா வாமா ராமாராமாரா
மாகோபா லாமாவா வாய் . (44)
மெச்சுபுகழ் வேங்கடவா
வெண்பாவில் பாதியில்
என் இச்சையில்
உன் சென்மம் எடுக்கவா
- மச்சா | மச்சாவதாரமாக | மீன்
- கூர்மா | கூர்மாவதாரமாக | ஆமை
- கோலா | கோலம் என்னும் பன்றியாக
- சிங்கா | நரசிங்கப் பொருமாளாக | அரிமா, (சங்கம்)
- வாமா | வாமனனாக
- ராமா | பரசுராமனாக
- ராமா | பலராமனாக
- ராமா | சீத்தாராமனாக
- கோபாலா | மாடு மேய்க்கும் கோபாலனாக
- மாவா | கல்கியாக | குதிரை
No comments:
Post a Comment