Pages

Sunday, 13 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 3

சேரன்
பாடல்
வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர்
மாமையை அன்றோ இழப்பது – மாமையிற்
பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு - 3

சேரன் கோதை தாவும் போர்க்குதிரை பூட்டிய தேரில் செல்பவன். அவன் இப்போது மதுவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரில் உலா வருகிறான், அவனைக் கண்ட மகளிர் தன் மேனியிலிருந்த மாந்தளிர் போன்ற மாமை நிறத்தை இழந்துவிட்டனர். நானோ என் மேனியில் பொன்னிறம் ஊறிக்கிடப்பது போன்ற பசப்பு நிறத்தைப் பெற்றிருக்கிறேன். இது பழுதாகுமா? ஆகாது. மாமை நிறத்தைக் காட்டிலும் பல நூறு மடங்கு எனக்கு மேன்மையானது. காரணம் அவனுக்காக ஏங்கிக் கிடைத்த பேறு ஆயிற்றே – என்கிறாள் ஒரு தலைவி.  
மகளிர் மேனி நிறம் | மாமை நிறம் | பசப்பு நிறம்


No comments:

Post a Comment