சேரன்
பாடல்
கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல்
ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான் - 4
சேரமன்னன் கோதை கடல் போன்ற படைசூழ ஊர்வலம்
வருகிறான். ஆயிழைத் தோழியே! அவனைக் காண்ணாரக்
காணவொட்டாமல் தாய் கதவை அடைத்துத் தாளிட்டிருக்கிறாள். ஆயின், அவனோடு என்னைச் சேர்த்துப்
பேசும் ஊரார் வாயை அவளால் அடைக்கமுடியுமா?
![]() |
| உலைமூடி |

No comments:
Post a Comment