நடுக்கடலில் புலி என்று காளமேகப் புலவர் பாடிக்
காட்டிய ஒரு
நாற்சீரடி ஆசிரிய விருத்தம்.
பாடல்
தடக்கடலிற் பள்ளிக்கொள் வோமதனை நற்சங்கரனார்
அடற்புலிக்குட்டிக் களித்தனரா மதுகேட்டு நெஞ்சில்
நடுக்கம்வந் துற்றதுகைகா லெழாநளினத்தி யென்னை
இடுக்கடிபாயைச் சுருட்டடி யேகடி யம்பலத்தே . (55)
தடக் கடலில் பள்ளிக்கொள்வோம் அதனை நல் சங்கரனார் அடல் புலிக்குட்டிக்கு அளித்தனராம் அது கேட்டு நெஞ்சில்
நடுக்கம் வந்து உற்றது கை கால் எழா நளினத்தி என்னை இடுக்கடி பாயைச் சுருட்டடி ஏகடி அம்பலத்தே.
நளினம் என்பது தாமரை. நளினத்தில் இருக்கும்
திருமகள் நளினத்தி. சிவபெருமான் திருமாலைப் புலிக்குட்டிக்குக் கொடுத்துவிட்டாராம்.
(புலிக்குட்டி என்பது திருப்புலியூர் எனப்படும் ஊர்.
108 வைணவத் தலங்களில் ஒன்று.) அதனைக் கேட்ட திருமால்
நெஞ்சம் நடுங்கினார். அவருக்குக் கை கால் வரவில்லை (எழவில்லை) தன் மனைவி நளினத்தியிடம்
கூறினார். என்னை இடுக்கிப் பிடித்துக்கொள்ளடி. பாயைச் சுருட்டிக்கொள்ளடி. அவன்
இருக்கும் அம்பலத்துக்கே சென்றுவிடுவோம் – என்றாராம்.
![]() |
| நளினத்தி |

No comments:
Post a Comment