Pages

Monday, 28 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 33

சோழன் | புனல்நாட்டுக் காளை
பாடல் 33

ஊடல் எனஒன்று தோன்றி அலருறூஉங்
கூடல் இழந்தேன் கொடியன்னாய் – நீடெங்கின்
பாளையிற் தேன் தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்படையுட் பெற்று. -33

புனல்நாட்டுக் காளையைக் கண்ணுறங்கும் கனவில் கண்டேன். ஒரு சமயம் பிணக்குப் போட்டு ஊடிக்கொண்டிருந்தேன். மற்றொரு சமயம் அவனோடு கூடியிருப்பேனா என்று விளையாட்டில் கூடல் இழைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கொடி போன்றவளே! தோழியே! என்ன செய்வேன்? தென்னம்பாளையில் தேன் கூடு கட்டும் புனல்நீர் வளம் மிக்க நாடன் அவன்.
மரக்கிளையில் தேன் கூடு
பாடல் தென்னை மரத்தில் தேன்கூடு என்று என்று கூறுகிறது

No comments:

Post a Comment