வாள் வாள் என்று
அடுக்கி வரக் காளமேகப்
புலவர் பாடிக் காட்டிய
ஒரு வெண்பா.
பாடல்
செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில்
வெற்றிபரி யும்வாளே வீரவாள் – மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாளிவ ளாவா ளாம் . (56)
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாள் இவள் அ[<ஆ]வாள் ஆம்.
பகைவரை வென்ற பின்னர்
திருமலைராயன் கையில் இருக்கும் வாளே வாள் எனச் சொல்லத்தகும். பிறவெல்லாம் போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள் ஆவாள் இவள் அ[<ஆ]வாள் ஆம்.
![]() |
| கையில் வாள் |

No comments:
Post a Comment