Pages

Wednesday, 30 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 34

சோழன் | வளவன்
பாடல் 34

புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன் – நிலவியசீர்
மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு. -34

ஒரு கனவு.
அதில் நான் அவனோடு ஊடல் கொள்ளவில்லை.
கூடி அரவணைத்து நின்றேன்.
ஆனால் அந்தக் கலவி மயக்கத்தில் அவன் இல்லை.
இதுதான் வளவனை நான் கண்டும் கானாமலும் இருக்கும் பாங்கு.
மண்ணுலகை ஆளும் செங்கோல் வேந்தன் அந்த வளவன்.
கனவு

No comments:

Post a Comment