சோழன் | புகார்ப்
பெருமானார்
பாடல் 35
கனவினுள்
காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள்
முன்விலக்கு நாணும் – இனவங்கம்
பொங்கோதம்
போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல்
வடுப்படுப்பச் சென்று. – 35
அவன்
புகார் நகரப் பெருமான். என் கனவில் அவன் தன்னைக் காணக் கொடுக்கவில்லை. எப்போதாவது வரும்போது
கண்ணில் கலந்து அவனைப் பார்க்கலாம் என்றால் என் நாணம் முன்னே வந்து நின்று தடுக்கிறது.
இது அவனது செங்கோலுக்கு வடு. (குற்ற வடு) – வங்கக் கப்பல்கள் கடலலையைக் கிழித்துச்
செல்லும் புகார் நகரம் அவன் இருக்கும் தலைநகரம்.
![]() |
| புகார் நகரத்தில் இருந்த இருகாமத்து இணை ஏரி (நூல் சிலப்பதிகாரம்) |
![]() |
| புகார் நகரத்தில் இருந்த புத்த பீடிகை (நூல் மணிமேகலை) |
![]() |
| மூழ்கிக் கிடக்கும் புகார்த் துறைமுகம் |



No comments:
Post a Comment