பன்றிக்கு மார்பிலே
கொம்பு என்று காளமேகப் புலவர் பாடிக்
காட்டிய ஒரு
வெண்பா.
பாடல்
தெருமுட் டப்பாளை சிதறிவளர் பூகத்
தருமுட்டச் செவ்வாளை தாவும் – திருமுட்டத்
தூரிலேகண் டேனொரு புதுமைபன் றிக்கு
மாரிலே கொம்பான வாறு . (57)
தெரு முட்டப் பாளை சிதறி வளர் பூகத் தரு முட்டச் செவ்வாளை தாவும் திருமுட்டத்து ஊரிலே கண்டேன்
ஒரு புதுமை பன்றிக்கு மாரிலே கொம்பு ஆனவாறு.
- எல்லாப் பன்றிகளுக்கும் வாயில்தான் பல்லுக்கொம்பு இருக்கும். ஆனால் திருமுட்டம் என்னும் ஊரில் இருக்கும் பன்றிக்கு மார்பகத்தில் கொம்பு இருப்பதைக் கண்டேன். இது புதுமையாக இருக்கிறதே!
- பன்றி – பன்றி உருவம் எடுத்த திருமால்.
- கொம்பு – கொம்பு போன்ற பெண். திருமகள்.
- திருமால் மார்பில் திருமகள் இருக்கிறாள்.
- திருமுட்டம் – கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஓர் ஊர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
- பூகம் – பாக்குமரம்.
- திருமுட்டம் ஊரிலுள்ள குளத்தில் இருக்கும் செவ்வாளை மீன் பாக்கு மரத்தின் பாளையை முட்டும்படித் தாவுவதால் அங்குப் பாக்குக் கொட்டைகள் சிதறி விழும். அந்தப் பாக்குக் கொட்டைகள் தெருவெல்லாம் சிதறிக் கிடக்கும் ஊர் இந்தத் திருமுட்டம்.


No comments:
Post a Comment