Pages

Wednesday, 30 December 2015

சங்கம் | காளமேகப்புலவர் KalamekapPulavar

முச்சங்கப் புலவர், சொக்கன் திருவிளையால் ஆகியவை வரக் காளமேகப் புலவர் பாடிக் காட்டிய ஒரு வெண்பா.

பாடல்

நூலாநாலாயிர நானூற்று நாற்பத் தொன்பான்
பாலாநானூற்று நாற்பத் தொன்பான்மேலாநாற்
பத்தொன்பான் சங்கமறு பத்துநாலாட லுக்கும்
கர்த்தன் மதுரையிற் சொக்கன் (58)

நூலா நாலாயிர நானூற்று நாற்பத் தொன்பான் பாலாம் நானூற்று நாற்பத் தொன்பான் மேலாம் நாற்பத்தொன்பான் சங்கம் அறுபத்துநால் ஆடலுக்கும் கர்த்தன் மதுரையின் சொக்கன்

நூல் இயற்றியவர்கள் தலைச்சங்கத்தில் 4449 பேர். இடைச்சங்கத்தில் 449 பேர். கடைச்சங்கத்தில் 49 பேர். மதுரையில் நடந்த திருவிளையாடல்கள் 64. இவை அனைத்துக்கும் மூல கருத்தாவாக இருந்தவன் மதுரைச் சொக்கநாதன்.
மதுரைச் சொக்கநாதர் கோயில் 

No comments:

Post a Comment