சேரன் | சேரலர்
கோக்கோதை
பாடல் 10
இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய்
செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்கச்
சொல்லும் பழியோ பெரிது. – 10
இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன்,
இவன் என் நிறை நெஞ்சைக் குறை நெஞ்சு ஆக்கிய
கள்வன்
என்று சேரலர் கோக்கோதை செல்லுமிடமெல்லாம்
அவனைப் பழி தூற்றுகிறால்களே!
“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை
133 காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக்
காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள்
![]() |
| சித்தன்னவாசல் ஓவிய வரைவு பெண் நலம் |

No comments:
Post a Comment