சேரன் | குடநாடன்
| வஞ்சிக்கோமான்
பாடல் 9
வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று)
அருகலர் எல்லாம் அறிய – வருகலாம்
உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9
கலாம் என்பது கலகலப்பு.
வருக குடநாடன்
வருக வஞ்சிக் கோமான்
என்று இவள் அருகில் இல்லாதவர்கள் எல்லாம்
கலகலப்பாக இருக்கின்றனர்.
ஆனால் இவள் மட்டும் அவனைக் கண்ட பின்பு கலகலப்பு
ஒழிந்து காணப்படுகிறாளே! ஏங்கிக் கிடக்கிறாளே!

No comments:
Post a Comment