Pages

Thursday, 24 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 23

சேரன் | கோதை | முசிறியார் கோமான்
பாடல் 23

வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து
ஊரறி யலாகா கிடந்தனவே – போரின்
முகையவிழ்ந்தார்க் கோதை முசிறியார் கோமான்
நகையிலைவேல் காய்த்தினார் நாடு. – 23

கோதை மொட்டு விரியும் மாலை அணிந்தவன்.
முசிறித் துறைமுக நாட்டின் கோமகன்.
போர்க்காலத்தில் வேல் காய்ச்சி வடித்துக் கூர்மையாக்கப்படும்.
கோதை வேலைக் காய்ச்சி வடிக்கும்படிச் செய்தவர் நாடு என்ன ஆகும்?
ஆங்காங்கே வேர் விடும் அறுகம்புல் பம்பிக்கிடக்கும் (தழைத்துக்கிடக்கும்)
தானே முளைத்து ஆங்காங்கே படரும் சுரைக் கொடிகள் படர்ந்து கிடக்கும்.
வேளைச் செடிகள் முளைத்துக்கிடக்கும்.
இப்படிக் காடாகிக் கிடக்கும்.
அறுகை | அறுகம்புல் 

சுரை

வேளைச் செடி



No comments:

Post a Comment