சேரன் | கோதை
பாடல் 24
இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறூர்ந்த
அந்தரத்தான் என்னின் பிறையில்லை – அந்தரத்துக்
கோழியான் என்னின் முகன்ஒன்றே கோதையை
ஆழியான் என்றணரற் பாற்று. – 24
கோதை யார்?
இந்திரன் என்று சொல்லலாம் என்றால், அவனுக்கு
இருக்கும் ஆயிரம் கண்கள் இவனுக்கு இல்லையே! இரண்டு கண்கள் தானே உள்ளன.
காளை மீது ஏறி அந்தரத்தில் வரும் சிவன் என்று
சொல்லலாம் என்றால், அவன் நெற்றியில் பிறை இருப்பது போல இவனுக்கு இல்லையே.
கோழிக்கொடி கொண்ட அந்தரத்து முருகன் என்று
சொல்லலாம் என்றால் அவனுக்கு இருப்பது போல ஆறு முகங்கள் இவனுக்கு இல்லையே! ஒரு முகம்
தானே உள்ளது.
எனவே, இந்திரனோ, சிவனோ, முருகனோ இல்லை.
ஆதலால், அரசன் கோதையை ஆழிச்சக்கரம் கொண்ட
திருமால் எனல் பொருந்தும்.
திருமால் கையில் ஆழிச்சக்கரம் உள்ளது.
கோதை கையில் ஆட்சிச் சக்கரம் உள்ளது.

No comments:
Post a Comment