சேரன் | மாந்தை நாடன்
பாடல் 25
புன்னாகச்
சோலை புகழ்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம்
நின்றலரும் நன்நாடன் – என்னாகம்
கங்குல்
ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல்
இவர்அறிந்த ஆறு. - 25
புன்னாகம்,
நன்னாகம், தென்னை ஆகிய மரங்கள் சூழ்ந்துள்ள மாந்தை நகரத்தைத் தலைநகராகக் கொண்ட நாட்டை
உடையவன். சேரன். அவன் ஒருநாள் என் கனவில் வந்தான். என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான்.
இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? என்னையும் அவனையும் சேர்த்து ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள்.
– இப்படித் தலைவி ஒருத்தி கூறுகிளாள்.
![]() |
| நாகம் ஒருவகை மரம் | இது நாகம்பூ |

No comments:
Post a Comment