Pages

Thursday, 24 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 26

சேரன் | கோதை
பாடல் 26

இருங்களி றீன்ற மடப்பிடி சாரல்
இரங்கருவி நீராற் றெளிமின் - நலங்கிளர்வேற்
றுன்னரும் போர்க்கோதை துடாச்செருக்கின் (முன்னின்ற)
மன்னன் மதிலாய வென்று. – 26

இந்தப் பாடல் சிதைந்துள்ளது. பச்சை எழுத்தில் முன்னின்ற என்னும் சீர், வெண்பா-இலக்கணம் சிதையா வகையில் என்னால் சேர்க்கப்பட்டுள்ளது.

கோதை துடுக்குத்தனமாக செருக்குடன் தன்னை எதிர்த்து நின்ற மன்னர் மதில்களை வென்றான். அவன் வெற்றிக்கு உதவியது அவன் களிறு. அந்தக் களிற்றுக்குப் ஒரு பெண்யானை பிறந்துள்ளது. அதற்கு அவன் நாட்டு மலைச்சாரலில் ஒலிக்கும் அருவிநீர் கொண்டுவந்து நீராட்டுங்கள்.

இரங்கல் = ஒலித்தல்
துன்னரும் = நெருங்க முடியாத
பிடியும் கன்றும் 


No comments:

Post a Comment