சோழன் | உறந்தையர்
கோன் | தமிழர் பெருமான்
பாடல் 27
திறந்திடுமின்
தீயவை பிற்காண்டு மாதர்
இறந்து
படிற்பெரிதாம் ஏதம் – உறந்தையர்கோன்
தண்ணார
மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக்
காணக் கதவு . -27
முதலில்
கதவைத் திறந்துவிடுங்கள். நிகழப்போகும் தீமையைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். உறையூர்
அரசன் தமிழர் பொருமானைக் கண்ணாரக் காணட்டும். காணமுடியாமல் காதல் கொண்ட மாதர் இறந்துவிட்டால்
துன்பம் மிகப் பெரிதாக ஆகிவிடும் அல்லவா? எனவே கதவைத் திறந்துவிடுங்கள். உறந்தையர்கோன்
உலா வருவதை மாதர் பார்க்கட்டும்.
![]() |
| உறையூர் இக்காலத்தில் உறையூரில் உள்ள பஞ்சவருணப் பெருமாள் கோயில் |

No comments:
Post a Comment