சோழன் | சோழன்
| பாடலம்
பாடல் 29
சுடரிலைவேற்
சோழன்தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான்
பைந்தொடியார் காணத் – தொடர்புடைய
நீர்வலை
யிற்கயல் போற்பிற ழும்மேதன்
சாலேக
வாயில்தொறுங் கண். – 29
சுடரும்
வேலை உடைய சோழன் தன் பாடலம் என்னும் குதிரைமேல் ஏறி உலா வந்தான். மகளிர் தன் வளையல்
குலுங்க ஓடிவந்து சன்னல் (சாலேகம்) வழியாகப் பார்த்தனர். அப்போது சன்னல் கம்பிகளுக்குப்
பின்னால் அவர்களின் கண்கள் தண்ணீருக்குள் போட்ட வலைக்குள்ளே பிறழும் மீன்கள் போலப்
புரண்டன.
![]() |
| வலைக்குள் மீன் |

No comments:
Post a Comment