Pages

Saturday, 26 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 30

சோழன் | சோழன் | பாடலம்
பாடல் 30

அன்னையும் கோல்கொண் டலைக்கும் அயலாரும்
என்னை அழியுஞ்சொற் சொல்லுவர் –நுண்ணிலைய
தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண்தேர் வளவன் திறத்து. – 30

தேரில் உலா வரும் வளவனைக் கதவைத் திறந்து பார்க்காதே என்று என் அன்னை என்னைக் கோலால் அடிக்கிறாள். அயலாரோ என்னை அவனோடு சேர்த்து அலர் தூற்றுகின்றனர். இந்த நிலையில் தேரைநோய் விழுந்த தேங்காய் உள்ளே அழுகிய பருப்புடன் இருப்பது போல் நொந்து கிடக்கிறேன். 
தேரை-நோய் பட்ட தேங்காய் 


No comments:

Post a Comment