சரப மூர்த்தியைப் போற்றி ஒரு
வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப்
புலவர் வெண்பா.
பாடல்
கூறிக்கெட் டேழுங்குலைந்து நடுநடுங்கிப்
பூதிக்கொப் பாகவன் றேபோய் விடுமே – ஆதி
நரக்காட் டகவரியை நற்சரப மாகிச்
சுருக்கா விடினஞ் சுணி . (52)
கூறிக் கெட்டு ஏழும் குலைந்து நடுநடுங்கிப் பூதிக்கு ஒப்பாக அன்றே போய்விடுமே, ஆதி நரக்காட்டக அரி
ஐ நல் சரபம் மாகிச் சுருக்கா விடின் நஞ்சுணி . (52)
சரபம் என்பது சர்ப்பம். இது நஞ்சினை
உட்கொண்டது. அரி பாதி, நரன் பாதி என்று (நரசிம்ம மூர்த்தி) உருவம் தாங்கித்திருமால் வந்து உலகை நல்வழிப்படுத்தினார். இல்லாவிட்டால் இந்த உலகம் என்ன ஆகும்?
எதையோ கூறிக்கொண்டு கெட்டொழியும். ஏழுலகும் கெட்டொழியும். குலைந்து கெட்டொழியும்.
நடுநடுங்கிக் கெட்டொழியும். மண் புழுதிக்கு ஒப்பாக அன்றே போய்க் கெட்டொழியும்.
![]() |
| சரப மூர்த்தி |
![]() |
| சரபம் |


No comments:
Post a Comment