’சீத்துப் பூத்து’ என்று ஒரு
வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப்
புலவர் வெண்பா.
அடி விழும் என்று பயந்து சீத்துப்பூத்து
என்று வாலைச் சுருட்டிக்கொண்டு கிடக்கிறான் என்பது பேச்சு வழக்கு.
பாடல்
அப்பூருஞ் செஞ்சடைமே லம்புலியைப் பார்த்துப்பார்த்
தெப்போதுஞ் சீத்துப்பூத் தென்னவே – முப்போதும்
வாலங்காட் டாநிற்கும் வாயங்காக் காநிற்கும்
ஆலங்காட்டான் பூ ணரா .(53)
அப்பு ஊரும் செஞ்சடை மேல் அம்புலியைப் பார்த்துப் பார்த்து எப்போதும் சீத்துப் பூத்து என்னவே முப்போதும் வால் அங்கு
ஆட்டா நிற்கும் வாய் அங்ககாக்கா நிற்கும்
ஆலங்காட்டான் பூண் அரா .
சிவ பெருமானுக்குக்
கங்கை நீர் பாயும் சடை. அந்தச் சடையில் அம்புலி. சிவன் கையில் அணிகலனாகத் திகழ்வது
பாம்பு. அந்தப் பாம்பு நிலாவை விழுங்குவதற்காக வாயைப் பிளந்துகொண்டு நிற்கும்.
சிவன் தலையில் இருப்பதால் விழுங்க முடியாமல், வாலை ஆட்டிக்கொண்டு சீத்துப்பூத்து
என்று வாயைப் பொத்திக்கொண்டு கிடக்கும்.
சந்திர கிரகண நாளில்
நிலாவைக் ‘கேது’ என்னும் பாம்பு விழுங்குவதாகச் சொல்லப்பட்ட காலம்.

No comments:
Post a Comment