சோழன் | செம்பியன்
பாடல் 31
அலங்குதார்ச்
செம்பியன் ஆயெழில்தோள் நோக்கி
விலங்கியான்
வேண்டா வெனினும் – நலந்தொலைந்து
பீர்மைற்
கொளல்உற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல்
நீர்மே
லெழுந்த நெருப்பு. – 31
செம்பியனின்
அசைந்தாடும் மாலை பூண்ட தோளை நோக்கினேன். நான் விரும்பவில்லை. விலகிவிட்டேன். என்றாலும்
என் மேனியின் நல்லழகெல்லாம் தொலைந்து விட்டது. பீர்க்கம்பூ நிறத்தில் பசலை-நோய் பட்டுக்
கிடக்கிறது. இதனைப் பார்த்த பேதைப் பெண்கள் நீரின் மேல் நெருப்பு எரிகிறது என்கின்றனர்.

No comments:
Post a Comment