Pages

Sunday, 27 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 32

சோழன் | கிள்ளி
பாடல் 32

நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு. – 32

நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்பக் காமருதோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு போலத் திரிதரும் பேரும் என் நெஞ்சு.

கிள்ளி உலா வருகிறான். அவனைக் காணவேண்டும் என்று என் கண் கவலை கொண்டுள்ளது. அதற்கு உடன்படாத நாணம் என்னைப் பின்வாங்கச் செய்கிறது. என் நலப்பாடு என்னை நெகிழ்விக்கிறது. இதற்கு இடையே என் நெஞ்சு இருதலைக் கொள்ளி எறும்பு போல முன்னும் பின்னும் நகர்ந்து ஊசலாடுகிறது.
இருதலைக் கொள்ளி எறும்பு

No comments:

Post a Comment