குரங்கு செய்யும் சேட்டைகளை ஒரு பாடலில்
காளமேகப் புலவர் பாடிக்காட்டியது.
பாடல்
குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தேள்கொட்டக்
கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வ – விரைந்துபேய்
பற்றவேகள் ளுண்டுபச்சை மிளகைக் கடித்தால்
எத்தனைபார் சேட்டைக் கிடம். (60)
குரங்கு அனலில் வீழ்ந்து வெறி கொண்டு தேள் கொட்டக் கரம் செறியப் பாம்பு அலவன் கவ்வ விரைந்து பேய் பற்றவே கள் உண்டு பச்சை மிளகைக் கடித்தால் எத்தனை பார் சேட்டைக்கு இடம்.
குரங்கு இயல்பாகவே சேட்டைகள்
பல செய்யும் விலங்கு.
- அது நெருப்பில் விழுந்துவிட்டது. அப்போது செய்யும் சேட்டை
- அதற்கு வெறி பிடித்துவிட்டது. அப்போது செய்யும் சேட்டை
- அதனைத் தேள் கொட்டிவிட்டது. அப்போது செய்யும் சேட்டை
- ஒரு கையில் பாம்பையும், மற்றொரு கையில் நண்டையும் பிடுத்துக்கொண்டிருக்கிறது. அப்போது செய்யும் சேட்டை
- அதனைப் பேய் (அச்சம்) பிடித்துக்கொண்டது. அப்போது செய்யும் சேட்டை
- அது கள்ளைக் குடித்துவிட்டது. அப்போது செய்யும் சேட்டை
- காரம் அதிகம் கொண்ட பச்சை மிளகை வாயில் மென்றுவிட்டது. அப்போது செய்யும் சேட்டை
இப்படி நேர்ந்தால்
எத்தனை எத்தனைச் சேட்டைகள் செய்யும்?

No comments:
Post a Comment