வேதன், அரன், மால் ஆகிய
மூவரும் உண்ணுவது, பூண்பது, ஏறுவது - மூவருக்கும் மூன்றும் ஒரே வெண்பாவில் வரும்படி அமைத்துக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
பாடல்
சிறுவ னளைபயறு செந்நெற் கடுகு
மறிதிகிரி தண்டுமணி நூற் – பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கரி .(38)
சிறுவன் | அளைபயறு | செந்நெல் | கடுகு | - உணவு
சிவன் சிறுத்தொண்டர் சமைத்துத் தந்த சிறுவனின்
கறியை உண்டார். | சிவராத்திரி அன்று வேகவைத்த பயறு உண்டார்.
திருமாலுக்கு நெல்லஞ்சோறு படையல்.
பிரமனுக்குக் கடுகு படையல்
மறி | திகிரி | தண்டு | - கையில்
வைத்திருப்பது
சிவன் கையில் வைத்திருப்பது மான்.
திருமால் கையில் வைத்திருப்பது சக்கரம்
பிரமன் கையில் வைத்திருப்பது தண்டாயுதம்
வெற்றேறு | புள் | அன்னம் |
சிவன் ஏறிச்செல்வது வெண்ணிறக் காளைமாடு
திருமால் ஏறிச்செல்வது கருடப் புள்
பிரமன் ஏறிச்செல்வது அன்னப் பறவை
வேதன் | அரன் |மால் |
வேதம் ஓதும் பிரமன்
அரகர சிவன்
திருமால்
மணிநூல் பொறியரவம் - ஆகியவற்றையெல்லாம் நான்
பார்த்தேன். இதற்குக் கல்மலையில் பூத்திருக்கும் தாழம்பூவே சான்று. (கற்றாழம் பூவே கரி)
மற்றும் மூவரும்
பூணூல் அணிந்திருப்பதையும்
புள்ளித் தோல் கொண்ட பாம்பை அணிந்திருப்பதையும்
நான் பார்த்தேன்.
சான்று வேண்டுமா?
அன்னப் பறவை உருவம் கொண்டு சிவனது முடியைக்
காணச் சென்ற பிரமன் காணமுடியால் சிவன் தலையிலிருந்து நழுவிக் கீழே இறங்கிய
தாழம்பூவைச் சாட்சியாக வைத்து, பன்றி உருவில் சிவனது அடியைக் காணச் சென்று
முடியாமல் திரும்பிய திருமாலுக்குக் காட்டி நம்ப வைத்தானே, அந்தத் தாழம்பூ-தான்
எனக்கும் சாட்சி (கரி)

No comments:
Post a Comment