![]() |
| சேரன் | சோழன் | பாண்டியன் |
முத்தொள்ளாயிரம் என்பது
பண்டைய தமிழ்நூல் நூல்களில் ஒன்று. சேரன், சோழன், பாண்டியன் ஆகிய அரசர்களைப் போற்றிப்
பாடும் வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். பத்துப் பாடல்கள் பத்து கொண்ட நூல் பதிற்றுப்
பத்து. நூறு பாடல்கள் ஐந்து கொண்ட நூல் ஐங்குறுநூறு. அதுபோலத் தொள்ளாயிரம் பாடல்கள்
மூன்று கொண்ட நூல் முத்தொள்ளாயிரம். இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. தொல்காப்பியம்
யாப்பருங்கலம் முதலான இலக்கண நூல்களுக்கு உரை எழுதியவர்கள் மேற்கோள்களாக எடுத்துக்காட்டிய
பாடல்களைத் தொகுத்து இந்த நூலை அறிஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
எழுத்தாளர் கபிலன் உரையுடன்
அருணோதயம் பதிப்பகத்தார் வெளியாட்டுள்ள இந்த நூலில் 109 பாடல்கள் உள்ளன. இணைய வெளியில்
காணப்படும் இந்த நூலின் பதிப்பில் 109 பாடல்கள் உள்ளன. இரண்டையும் இணைத்துப் பார்க்கும்போது
115 பாடல்கள் உள்ளன.
முத்தொள்ளாயிரம் – கடவுள்
வாழ்த்து
முத்தொள்ளாயிரம் – சேரன்
முத்தொள்ளாயிரம் – சோழன்
முத்தொள்ளாயிரம் – பாண்டியன்
என்னும் தலைப்புக்களில்
அவை பகுத்துத் தரப்படுகின்றன.
மேலும் 115 பாடல்களும்
தனித்தனியாகவும் விளக்கப்பட்டுள்ளன.
அருணோதயம் பதிப்பபு நூலுக்கு
மதிப்புரை வழங்கியுள்ள சென்னைப் புதுக்கல்லூரிப் பேராசிரியர் நா. பாண்டுரங்கள் முத்தொள்ளாயிரப்
பாடல் ஒவ்வொன்றும் தகதகக்ககும் தங்கநிலா என்று பாராட்டியுள்ளார். மேலும் கடைவாயில்
அடக்கிக்கொண்டு சப்பிச் சுவைக்க வேண்டிய கற்கண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
உலா வரும் அரசன்மீது காதல்
கொண்டு தலைவி கூறும் ஒருதலைக் காமச் செய்திகளை, கைக்கிளைப் பொருண்மைச் செய்திகளை கொண்ட
பாடல்கள் இதில் பெரும்பகுதியாக இடம்பெற்றுள்ளன.

No comments:
Post a Comment