Pages

Sunday, 6 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram கடவுள் வாழ்த்து

முத்தொள்ளாயிரம் கடவுள் வாழ்த்து
என்றும் நிலைபெற்றிருக்கும் நாளுக்குத் தமிழர் பெயர் சூட்டியுள்ள விண்மீன் தொகுதிகள், மதியம், கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்), ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்) என்று கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
அனைத்தையும் ஆதியில் படைத்தவன் ஆதிரையான் (ஆதிரை நாளுக்குரிய சிவன்) என்கின்றனர்.

பாடல்

மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு – 1
அனைத்தையும் ஆதியில் படைத்தவன் ஆகும் திரையில் அறிதுயில் கொண்டுள்ள திருமால் என்கின்றனர் 


No comments:

Post a Comment