சிவன், கணபதி, செவ்வேள்
- மூவருக்கும் சிலேடை அமைத்துக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
பாடல்
சென்னிமுக மாறுளதாற் சேர்கரமுன் னாலுமையால்
இன்னிலத்திற் கோடென் றிருக்கையால் – மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதியுஞ் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே. (37)
கண்ணுதல் சிவன்
சென்னிமுகம் ஆறு உளதால் | சேர்கரம் முன்னால் உமையால் | இன்னிலத்தில் கோடென்று இருக்கையால்
சிவனின் தலைமுகத்தில் கங்கை ஆறு உள்ளது | சேரும்
கை முன்னால் உமை இருக்கிறாள் | இனிய நிலத்தில் திருவண்ணாமலை என்னும் கோடாக
(மலையாக) இருக்கிறான்.
கணபதி
சென்னிமுக மாறு உளதால் | சேர்கரமுன் னால் | உமையால் | இன்னிலத்தில் கோடு என்று இருக்கையால்
கணபதியின் தலையில் மாறுபட்ட முகம் உள்ளது | அது
முன்னே சேர்ந்திருக்கும் கை (கரம்) | உமை அரவணைக்கும் கை உள்ளது | இனிய நெஞ்ச
நிலத்தில் இருக்கும் கணபதிக்குக் கொம்பு என்று ஒன்று உள்ளது.
செவ்வேள் முருகன்
சென்னிமுகம் ஆறு உளதால் | சேர்கரமெ முன் னால் (முந்நால்) | உமையால் | இன்னிலத்தில் கோடு என்று இருக்கையால்
முருகனுக்கு ஆறு தலை கொண்ட முகம். | கை
முந்நான்கு பன்னிரண்டு | கரம் தழுவுவது உமை | இனிய நிலவுலகில் மலைத்தெய்வமாக
விளங்குகிறான். (சேயோன் மேய மைவரை உலகம் – தொல்காப்பியம்)
![]() |
| சிவன், உமை, கணபதி, செவ்வேள் |

No comments:
Post a Comment